Friday, May 3, 2024
Homeசினிமா400 எபிசோட்கள்.. சாதனை படைத்த அருவி சீரியல்... குவியும் வாழ்த்துகள்!

400 எபிசோட்கள்.. சாதனை படைத்த அருவி சீரியல்… குவியும் வாழ்த்துகள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சன் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியல், தற்போது 400 எபிசோட்களை கடந்துள்ளது.

இதை சேனல் தரப்பு புதிய போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அருவி குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அக்டோபர் 2021-ல் முதல் அருவி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ் மற்றும் கார்த்திக் வாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் மூத்த நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த சீரியல் கன்னட தொலைக்காட்சி தொடரான கஸ்தூரி நிவாசாவின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது.

அருவியின் புதிய சாதனையைப் பற்றி பேசிய நடிகர் கார்த்திக் வாசு, “அருவி சீரியல் இந்த முக்கிய மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சீரியலின் பயணம் என் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தது” என்றார்.

ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ் கூறுகையில், “அருவி போன்ற அற்புதமான சீரியலில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன், 400-வது எபிசோடை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments