Thursday, May 2, 2024
Homeஅரசியல்செய்திJEE தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விளக்கு அளிக்க வேண்டும் …..தேசிய தேர்வு முகமையிடம் கோரிக்கை..

JEE தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விளக்கு அளிக்க வேண்டும் …..தேசிய தேர்வு முகமையிடம் கோரிக்கை..

சென்னை: ஜேஇஇ தேர்வு விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க தேசிய தேர்வு முகமையிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும், தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுத உரிய தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி), இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி) உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கும் தகுதி பெறுவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு வரும் கல்வியாண்டில் இரு முறை நடத்தப்படவுள்ளது.ஜனவரி 24ம் தேதி தொடங்கும் முதல் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 15ம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் பல லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.

மதிப்பெண்கள் தேவை
ஆனால், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இப்போது பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களால் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. கூட்டு நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த மதிப்பெண் எவ்வளவு? மாணவர்கள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? பெற்ற மதிப்பெண்களின் விழுக்காடு ஆகிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

அனைவருக்கும் தேர்ச்சி
2021ம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனால் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

3 ஆயிரம் பேர் பாதிப்பு
ஆனால், தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தேர்வுகள் நடத்தப்படாததால் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால், 2020-21 கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மதிப்பெண்கள் இல்லாததால் விண்ணப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் 30,000மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அன்பில் மகேஷ் தகவல்
இந்த நிலையில், தேசிய தேர்வு முகாமையை தொடர்பு கொள்ள தமிழக தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், அரசு தேர்வுகள் இயக்ககம் மூலமாக தேசிய தேர்வு முகாமைக்கு தமிழக தமிழக மாணவர்களுக்கு 10-ம் தேர்வு மதிப்பெண் பதிவிடுவதில் இருந்து தளர்வு அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments