Sunday, April 28, 2024
Homeசினிமாதமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா காலமானார் !

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா காலமானார் !

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

1980களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர்.

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், பின்னர் ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சத்யராஜ் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கினார். சிவாஜி, ரஜினி முதல் இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார்.

மனோபாலாவின் திடீர் மரணம் திரியுலகினிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments