Monday, April 29, 2024
Homeசினிமாநடிகர் விஜய் வெளியிட்ட ஷாருக்கான் 'பதான்’ பட ட்ரெய்லர்…

நடிகர் விஜய் வெளியிட்ட ஷாருக்கான் ‘பதான்’ பட ட்ரெய்லர்…

ஷாருக்கானின் பதான் பட ட்ரைலரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள, பதான் படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக இந்தப் படம் உருவாகிறது.

இதில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட நட்சத்திரங்களும் பதான் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் காவி நிறத்தில் தீபிகா படுகோன் பிகினி அணிந்திருந்தது வலதுசாரிகளின் எதிர்ப்பைப் பெற்றது. படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையே தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments