Wednesday, May 15, 2024
Homeசினிமாநடிகை அமலா பால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு.. இதுதான் காரணமாம்..!

நடிகை அமலா பால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு.. இதுதான் காரணமாம்..!

கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. பிரபல திரைப்பட நடிகை அமலா பால் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உறவினர்களுடன் சென்றுள்ளார். அவரை கோவிலுக்கு அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது.

அமலா பால் ஆலயத்துக்கு வெளியே நின்று சாமியை தரிசித்து விட்டு திரும்பியுள்ளார். தனது வருத்தத்தை கோவில் வருகை பதிவேட்டில் பதிவிட்டுள்ளார். அதில், “ இந்த 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது.

என்னால் தேவியை அருகில் சென்று தரிசிக்க முடியவில்லை. கோவிலுக்கு வெளியே நின்று சாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன். மக்களை மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களாக மதிக்கும் காலம் வரும், என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 18 மலையாளம் தொலைக்காட்சியிடம் பேசியுள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் நிர்வாகிகள், “ இந்த ஆலயத்தில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளின் படியே அமலா பால் அவர்களுக்கு அனுமதிக்கு மறுக்கப்பட்டது.

இந்த கோவில் இந்து மதத்தை பின்பற்றக்கூடிய ஆலயம். மாற்று மதத்தை சேர்ந்த சிலர் இந்த ஆலயத்தில் வந்து தரிசனம் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் யாரென்று யாருக்கும் தெரியாது.

மாற்று மதத்தை சேர்ந்த பிரபலங்கள் ஆலயத்தில் வந்து தரிசனம் செய்தால் அது மிகப்பெரிய சர்ச்சையாகி விடுகிறது. அமலா பால் ஒரு பிரபலம் அவரை எல்லோருக்கும் தெரியும். ஒரு உதாரணத்திற்கு, குருவாயூர் கோவிலில் பல கிறிஸ்துவம், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அப்போது எல்லாம் வராத சர்ச்சை பாடகர் ஜேசுதாஸ் சென்ற போது ஏற்படுகிறது.

அவர் ஒரு பிரபலம் என்பதால் இந்த விஷயம் சர்சையாகிறது. அமலா பால் சாமி தரிசனம் செய்ய வந்தபோது அவருடைய மதம் என்ன என கேள்வி கேட்டோம். இந்து மதத்துக்கு மாறிவீட்டீர்களா எனக் கேள்வி எழுப்பினோம் அவர் இல்லை என பதிலளித்தார்.

இதனையடுத்து தேவையில்லாத பிரச்னைகள் எழக்கூடாது என்பதால் அவரை ஆலயத்துக்குள் அனுமதிக்கவில்லை. கோவில் வாசலில் இருந்து சாமியை தரிசித்து செல்லுமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் நாங்கள் கூறியதை ஏற்றுக்கொண்டு கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார். கோவில் அலுவலகத்துக்கு வந்த அவருக்கு பிரசாதம் வழங்கி அனுப்பி வைத்தோம்” எனக் கூறீனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments