Saturday, May 18, 2024
Homeஇந்திய செய்திகள்புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்..

புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்..

புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று இரவு 8 மணிக்கு மேல் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், ஆகிய அனைத்து கடற்கரை மணற்பகுதி, மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று மாலை 6 மணிக்கு மேல் இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களை மூடவும், மதுகூடங்களை அனுமதித்த இடங்களில் மட்டுமே நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனத்தை இயக்குவோரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் சாலைகளில் பல இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. வாகன ஓட்டிகள் கவனிக்கும் வகையில் அவைகளில் ஒளிரூட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.

புதுச்சேரியில் இன்று இரவு 2 மணி வரை கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொண்டாட்டங்களை ஒரு மணிக்குள் முடிக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ள போதும் கோயில்கள் 2 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments