Saturday, April 27, 2024
Homeசினிமாமீண்டும் தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு-வெளியான முக்கிய தகவல்மீண்டும் !!

மீண்டும் தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு-வெளியான முக்கிய தகவல்மீண்டும் !!

இந்தியன்-2 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் தொடங்குகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கர்,  இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் புதிய திரைப்படத்தை ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். இதற்காக ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட தேதிகளை ஒதுக்கி இரண்டு திரைப்படங்களையும் எந்த சிக்கலும் இல்லாமல் இயக்கி வருகிறார். அந்த வகையில் இந்தியன் 2  படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை தற்போது சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நாளை தொடங்குகின்றனர்.  அந்த படப்பிடிப்பு 30 நாட்கள் சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது. அதில் படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சிகளை படமாக்குகின்றனர் என கூறப்படுகிறது.

கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பையும் மே மாதத்திற்குள் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அதேசமயம் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகளையும் சமீபத்தில் தொடங்கியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments