Sunday, April 28, 2024
HomeசினிமாCODE RED : சிவப்பும் லோகேஷ் கனகராஜும்.. LCU கதைகளை தாங்கி வரும் தளபதி 67.....

CODE RED : சிவப்பும் லோகேஷ் கனகராஜும்.. LCU கதைகளை தாங்கி வரும் தளபதி 67.. !?

CODE RED என்ற ஹேஷ் டேக் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. CODE RED என்ற வார்த்தை கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி, மெகா ஹிட்டான விக்ரம் திரைப்படத்தில் அதிகம் பயன்படுத்தப் பட்டிருந்தது. கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தைய காட்சியின்போது கமல் – விஜய்சேதுபதிக்கு இடையே உரையாடல் நடக்கும்.

இதன் முடிவில் கோட் ரெட் எனப்படும் பாஸ்வேர்டு வார்த்தையை விஜய் சேதுபதியிடம் கமல் சொல்வார். இந்த காட்சிக்கு மிகுந்த வரவேற்பு திரையரங்கில் கிடைத்தது. இதே போன்று விக்ரம் படத்தின் புரமோஷன் போஸ்டர்களிலும் CODE RED என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப் பட்டிருந்தது.

CODE RED என்ற வார்த்தை தளபதி 67 அல்லது விஜய்யின் கேரக்டரோடு தொடர்புடையதாக இருக்குமா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. தளபதி 67 திரைப்படம் லோகேஷ் கனகராஜி LCU எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதாவது லோகேஷின் முந்தைய படங்களுடன் தொடர்புடைய காட்சிகள் அவரது புதிய படத்தில் இடம் பெற்றிருக்கும். விக்ரம் திரைப்படத்தில், கைதி திரைப்படத்தின் சில காட்சிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கும். விக்ரம் படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாக உள்ள நிலையில், கைதி, விக்ரம் படங்களின் யுனிவர்சில் தளபதி 67 இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக விக்ரம் படத்தில் அமர் கேரக்டரில் நடித்த பகத் பாசில், தளபதி 67 படம் LCU-வில் அமையும் என்று கூறியிருந்தார். இந்த தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில் கைதி படத்தில் இடம் பெற்ற ஜார்ஜ் மரியான், தளபதி 67 படத்திலும் நடிக்கிறார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை. அதே நேரத்தில் இந்த திரைப்படம் எல்.சி.யூ. அல்ல என்றும் உறுதி செய்யப்படவில்லை.

இதேபோன்று ஹாலிவுட்டில் வெளிவந்த ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் படத்தின் தழுவலாக தளபதி 67 திரைப்படம் இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் கோட் ரெட் என்ற வார்த்தையை அழுத்தமாக பதிவு செய்யும் வகையில், கைதி, விக்ரம் படங்களை தொடர்ந்து விஜயின் தளபதி 67 படத்தின் போஸ்டரும் சிகப்பு வண்ணத்தால் நிறைந்திருக்கிறது.

இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்சில் வருமா அல்லது ஸ்டான்ட் அலான் எனப்படும் தனி கதையாக உருவாக்கப்படுமா அல்லது அவரது முந்தைய மாஸ்டர் திரைப்படத்தின் யூனிவர்ஸாக அமையுமா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments