Sunday, May 5, 2024
Homeசினிமாஇன்று வெளியாகவிருக்கும் வாரிசு டிரெய்லர்….. உச்சக்கட்ட ஆர்வத்துடன் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் …

இன்று வெளியாகவிருக்கும் வாரிசு டிரெய்லர்….. உச்சக்கட்ட ஆர்வத்துடன் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் …

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதலே விஜய் ரசிகர்கள் சோஷியல்மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments