Saturday, May 4, 2024
Homeசினிமாஎல்லா இடமும் நம்ம இடம்தான்…..வெளியானது வாரிசு டிரெய்லர்..மாஸ் வசனங்கள் நிறைந்த டிரெய்லர்…. டிரெண்ட் செய்து வரும்...

எல்லா இடமும் நம்ம இடம்தான்…..வெளியானது வாரிசு டிரெய்லர்..மாஸ் வசனங்கள் நிறைந்த டிரெய்லர்…. டிரெண்ட் செய்து வரும் ரசிகர்கள்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன்.

வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments