Sunday, April 28, 2024
Homeவன்னி செய்திகள்மன்னார் செய்திகள்மன்னார் காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 16 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள் !

மன்னார் காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 16 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள் !

மன்னார் சிலாவத்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 1 இலட்சத்து 11 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை (13-04-2023) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார்-இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மன்னார் பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபா.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட போதைப்பொருள், அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பிரிவு லஞ்ச ஒழிப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கடத்தல் பொருட்களை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments